வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமாரின் மக்கள் பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளராகவும் முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி செந்தில் குமார் அவரது ஊராட்சி மட்டுமின்றி முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தனி கவனம் செலுத்தி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள தொட்டி வலசை, கிருஷ்ணாபுரம், கீழ பனையடியேந்தல்,கருங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

பல்வேறு மக்கள் பணியை செய்து வரும் செந்தில்குமாரை நமது இணைய பத்திரிகையின் சார்பாக வாழ்த்துவோம்.

Also Read  வாலாந்தூர் ஊராட்சி - மதுரை மாவட்டம்