இடிந்து விழும் நிலையில் பயணியர் நிழற்குடை – அச்சத்தில் பொதுமக்கள்

மேல்மலையனூர் அருகே உள்ள அவலூர்பேட்டையிலிருந்து சேத்பட் செல்லும் நெடுஞ்சாலையில் குந்தலம்பட்டு கிராம மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை ஒரு பக்கம் இடிந்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் இனி வரும் கோடை காலத்தில் கிராம மக்கள் பயணியர் நிழற்குடையை பேருந்துக்காக காத்திருக்க பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் சுகாதாரமற்ற சூழலில் சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படும் பயணியர் நிழற்குடையை புதிதாக கட்டி பயன்பாட்டிற்கு தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Also Read  வெள்ளேரி ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்