மூன்று நாட்கள் முடங்கப்போகும் ஊராட்சி பணிகள்

தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களின் கஷ்டங்கள் சொல்லிமாளாது.

பத்து பேர் பார்க்க வேண்டிய வேலைகளை ஒற்றை ஆளாக செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. பணியின் பாரம் தாங்காமல் பல ஊராட்சி செயலாளர்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

பல்வேறு கட்டங்களில் பல போராட்டங்களை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

இந்த சூழ்நிலையில், வரும் 12ம் தேதி முதல் மூன்று நாட்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல்…ஊராட்சி நிர்வாகம் மூன்று நாட்கள் முடங்கும்.

Also Read  இலுப்பூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!