நாமகிரிபேட்டையில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம்,நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் செய்த தவறுக்காக சம்மந்தமே இல்லாமல் நாரைக்கிணறு ஊராட்சி செயலாளர் திரு.இரா.கருணாகரன் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும்,உத்தரவை உடனடியாக ரத்து செய்ய கோரியும் மாநில பொருளாளர் திரு. கே.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று மாலை 4.00 மணி அளவில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாராந்திர ஆய்வு கூட்டத்தை புறக்கணித்து முதற்கட்டமாக நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட தலைவர் திரு.கலை K.சிவசங்கர் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு இரா.செந்தில்குமார் நாமகிரிப்பேட்டை ஒன்றிய தலைவர் திரு க.அசோகன் மற்றும் சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இராசிபுரம், புதுச்சத்திரம் , நாமகிரிப்பேட்டை, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

TNPSA-SRG-DGL-09-20
*மாநில மையம்/நாமக்கல்மாவட்ட மையம்

Also Read  கணினி உதவியாளர்களின் போராட்டம்-மறு பரிசீலனை செய்திடுக-ஜான்போஸ்கோ பிரகாஷ் வேண்டுகோள்