தேனியில் திரளும் ஊராட்சி செயலாளர்கள்

காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்ட தலைவர் பாசமிகு சகோதரர் குமரேசன் அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் சூழ்ச்சியினால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இச் செயலை கண்டித்து தேனி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காலை 10 மணி முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது

ஊராட்சி செயலாளர் இனத்தை காக்கும் உரிமை நமது அனைவருக்கும் உள்ளது எனவே சங்க நலன் பாகுபாடு பார்க்காமல் ஊராட்சி செயலாளர் என்ற உணர்வோடு நாமும் அந்த பணியை தான் பார்க்கின்றோம் என்பதை மனதில் கொண்டு தேனி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு சங்கமிப்போம் திரள்வோம்.

இப்படி ஒரு செய்தி கேட்டு, உண்மை என்னவென்று கள ஆய்வு செய்தோம்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பல ஏக்கரில் இடம் வாங்கி,முறையான அனுமதி இல்லாமல் வீட்டுமனை பிரிவுகளை விற்பனை செய்துள்ளார்.

அந்த தகவலை அதிகாரிகளுக்கு தெரிவித்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

தவறு செய்த ஊராட்சி தலைவரை தண்டிக்காமல், தவறை சுட்டிக்காட்டிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை என்பது  மிகக் கொடுமையானது.

Also Read  பெரம்பலூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

அதனை கண்டித்து தான், மாநிலம் முழுவதும் இருந்து தேனி மாவட்டத்திற்கு திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தை செய்ய உள்ளனர் ஊராட்சி செயலாளர்கள்.

இந்த நிலையிலாவது சரியான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுத்திட வேண்டும்.