இலட்சியத்தை நோக்கி ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்களின் உரிமை பெறுவதற்கு சங்கங்களை ஆரம்பித்து உள்ளனர்.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுக்க பல்வேறு விதமான போராட்டங்களை ,மாநாடுகளை நடத்தி உள்ளனர்.

மக்களிடம் தினந்தோறும் தொடர்பில் உள்ளவர்கள் ஊராட்சி செயலாளர்கள் மட்டுமே. அதிகாலையில் ஆரம்பிக்கும் அவர்களின் பணி சிலநேரம் நள்ளிரவைக் கூட தாண்டலாம்.சிலநேரம்  ஞாயிற்றுகிழையிலும் பணி இருக்கும்.

கொரோனா காலகட்டத்தில் ஓய்வில்லாது உழைத்தவர் ஊரக பணியாளர்கள் என்றால், அதுமிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல.

அப்படிப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு சொந்தமாக இடமும்,கட்டிடமும் வேண்டும் என்ற லட்சியத்தோடு அந்த சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அறிக்கை

மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை நிதி திரட்டும் வாரமாக அறிவித்துள்ளனர். அவர்களின் லட்சியம் வென்றிட நமது மின்னிதழின் சார்பாக வாழ்த்துக்கள்.

திருச்சி நிச்சயம் திருப்பம் தரும்.

Also Read  அம்மன்குடி - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!