சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1. 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அல்லது தற்போது பணிபுரியும் ஊராட்சியில்
மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள்
அனைவரும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
2. நியமனம் செய்யப்பட்ட ஊராட்சியிலிருந்து சில காலம் வேறு ஊராட்சிக்கு
மாறுதலில் சென்று மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஊராட்சியில் மொத்த
பணிக்காலங்களில் 5 ஆண்டுகள் கடந்திருந்தால் மாறுதல் செய்யப்பட
வேண்டும்.
3.ஓர் ஆண்டுக்குள் பணி ஓய்வு பெறும் அலுவலர்களை பணிமாறுதல் செய்யக்
கூடாது.
4. அருகில் உள்ள ஊராட்சிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
5. ஏற்கனவே பணிபுரிந்த ஊராட்சிக்கு மாற்றம் செய்யக் கூடாது.
6.ஊராட்சிமன்றத் தலைவர்கள் ரத்த உறவுகளாக உள்ள ஊராட்சிக்கு மாற்றம் செய்யக் கூடாது.
7. பணிமாறுதல் செய்யப்படும் ஊராட்சி செயலர்கள் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும், பெறப்பட வேண்டும். (தவறும்பட்சத்தில் ஒழுங்கு
நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட வேண்டும்)
8.பணிமாறுதல்கள் அனைத்தும் ஆகஸ்ட்318 ஆம் தேதிக்குள் முடித்து அதன் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
9. தொடர்ச்சியாக புகார் வரக்கூடிய ஊராட்சி செயலாளர்களையும் பணிமாறுதல்செய்ய வேண்டும்,
10. பணிநியமனம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள ஊராட்சிகள் மற்றும்
காலிப்பணியிடம் தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு
பணியிடம் நிரப்பப்படாத ஊராட்சிகளில் பணிமாறுதல் செய்ய கூடாது.
நிபந்தனைகளை பின்பற்றி மேற்காணும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படவேண்டும் தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளார்.