பல்வேறு கோரிக்கை வைக்கும் பஞ்சாயத்து தலைவர்

இராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஓன்றியம்

வெங்கல குறிச்சி ஊராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை முன்வைத்து பொது மக்களின் சார்பாக நிண்ட நாள் கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் SD.செந்தில்குமார் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்வைத்துள்ளார்.

கோரிக்கைகள்: 1.பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வர காலை நேரம் சாரியாக 7.45 மற்றும் மாலை பள்ளி முடித்து வீடு திரும்ப மாலை : 5.30 மணிக்கு வெங்கல குறிச்சிக்கு அரசு பேருந்து வசதி வேண்டும்.மேலும்வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இருபாலர் ஆசிரியர்கள், பணி முடித்து வீடு திரும்ப மாலை நேரத்தில் பேருந்து வசதி வேண்டும்.

2.
வெங்கல குறிச்சி கிராமம் ரேசன் கடை கட்டிடம் வேண்டும்.தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

3. வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டு 3 மூன்று ஆண்டுகள் ஆகியும் கட்டிட வசதியில்லாமல் உள்ளது உடனே பள்ளிக்கு புதிய கட்டிட வசதி வேண்டும்.

4. கருங்கால குறிச்சி கிராமத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் வசதி (போர்வெல்) அமைக்க வேண்டும்.

5. கீழப்பணையடியேந்தல் கிருஷ்ணாபுரம் தெரு சாலைகள் (பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

Also Read  மூத்தவர்கள் மரக்கன்று நட இளையவர்கள் தண்ணீர் ஊற்றுகிறார்கள்

6. வெங்கல குறிச்சி நடுத்தெருவில் மற்றும் கிழக்கு தெரு அம்மன் கோவில் தெரு முருகன் கோவில் தெரு ஆதிதிராவிடர் காலனி தெரு தொட்டி வலசை கண்ணன் கோவில் அருகில் உள்ள சாலை ஆகியவை களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

7. தொட்டி வலசை முதல் வாளவந் தந்தாள் அம்மன் கோவில் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

என பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு வைத்துள்ளார்.சம்மந்தப்பட்ட அரசு துறைகள் ஆவண செய்யவேண்டும்.