இந்திய ஊரக துறையின் தேசிய பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஊராட்சி தலைவர்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற இந்திய அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் *National Level Consultative Workshop On Citizen Charter and Delivery Of Services By Panchayaths* பட்டறையில் தமிழகத்தின் சார்பாக பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் கலந்து கொண்டார்.

இந்திய அரசின் உள்ளாட்சித் துறையின் முதன்மை செயலர் த சுனில் குமார் இ.ஆ.ப, உள்ளாட்சித் துறையின் கூடுதல் செயலர் திரு. சந்திரசேகர குமார் இ.ஆ.ப, உள்ளாட்சித் துறையின் இணை செயலர் திரு. அலோக் ப்ரேம் நகார் இ.ஆ.ப, கர்நாடக மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மை செயலர் திருமதி. உமா மகாதேவன் இ.ஆ.ப, உள்ளாட்சித்துறை ஆணையர் திருமதி. சில்பா நாக் இ.ஆ.ப, கர்நாடக மாநில SIRD இயக்குனர் திருமதி. லஷ்மி பிரியா இ.ஆ.ப என பல மாநிலங்களின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளும் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

தனக்கு இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குனரகத்திற்கு  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

Also Read  செல்லூர் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்