இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மாவட்ட கூட்டமைப்பின் தலைவர் திருமதி சித்ரா மருது தலைமையில் செயலாளர்  செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள்  சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

 முக்கியமான கோரிக்கைகள்

ஒன்று வேலை முடிக்கப்பட்ட இறுதிப் பட்டியல் தொகையை உடனே வழங்க வேண்டும்.

இரண்டாவது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பணிகளுக்கு பணியாணை ஊராட்சி மன்ற தலைவருக்கு வழங்கப்படவேண்டும்

மூன்றாவது ஊராட்சிகளில் உள்ள உபரி நிதிக்கு நிர்வாக அனுமதி வழங்கி உடனே வழங்கப்பட வேண்டும்.

ஊராட்சி அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்கு ஊராட்சியில் உள்ள உபரி நிதி மாற்றம் செய்து தரப்பட வேண்டும் போன்ற  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.

Also Read  தூணுகுடி ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்