25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றிய ஊராட்சி

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன், அதிமுக சார்பில் சரோஜினி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 8,556 வாக்காளர்களைக்கொண்ட இந்த ஊராட்சியில் அதிமுகவே இத்தனை ஆண்டுகள் வென்றிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் கோவையில் திமுக ஒரு தொகுதியைக்கூடக் கைப்பற்றவில்லை. கடைசியாக 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றிருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து கலைவாணியே முன்னிலை வகித்துவந்தார். 6,552 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் கலைவாணி 4,372 வாக்குகளும், சரோஜினி 2,075 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் 2,287 வாக்குகள் வித்தியாசத்தில் கலைவாணி பெற்றிபெற்றார். இந்த வெற்றியைத் திமுகவினர் கொண்டாடிவருகின்றனர்.

Also Read  புயலை விட தீவிரமாக செயல்படும் எடப்படியார் - பாராட்டும் பொதுமக்கள்