பம்பரமாக செயல்படும் சீவலாதி பஞ்சாயத்து தலைவி பழனியம்மாள்

சீவலாதி ஊராட்சி மன்ற தலைவி திருமதி.பழனியம்மாள் அவர்கள் 5.12.2021ல் பம்பரமாக செயல்பட்டு ஊராட்சி பணிகளை கோடனூர் மற்றும் மஞ்சல்பட்டினம் ஆகிய பகுதிகளில் செய்து முடித்துள்ளார்.

கோடனூர் கண்மாய் கரையில் உள்ள மடையில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேரியதை கிராமவாசிகள்  தகவல் தெரிவித்ததை அடுத்த அவர் அப்பகுதியை பார்வையிட்டு கிராமவாசிகள் உதவியுடன் அவற்றை சரி செய்து மடையில் இருந்து தண்ணீர் வெளி  ஏறியதை தனது துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

அதன் பின்பு தொடர் மழை காரணங்களால் கோடனூர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருபதை அறிந்து அவ்விடத்தை பார்வையிட்டு தேங்கி இருந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை  மேற்கொண்டார்.

மேலும் அப்பகுதியில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க கிருமினாசினி பொடி தூவிட துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளார்.

அதன்பிறகு கண்மாய் கரையில் உள்ள மின்  மோட்டார் இயங்கவில்லை என்பதை உணர்ந்து மின் பழுது பார்க்கும் தொழிநுட்ப உதவியாளரை அழைத்து அவற்றை உடனடியாக இன்றே சரிசெய்து கிராமவாசிகளுக்கு குடி தண்ணீர் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்தார்.

அதன்பிறகு உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் கிருமி நாசினி பொடி உதவியுடன் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில்  மாலை வேளையில் தொட்டி சுத்தம் செய்யபட்டு உள்ளது.

Also Read  சொக்கநாதபுரம் ஊராட்சி - சிவகங்கை சட்டமன்றத் தொகுதி

இவ்வாறு கோடனூரில் பணிகளை முடித்துவிட்டு மஞ்சல்பட்டினம் பகுதிகளிலும் சில பணிகளை மேற்கொண்டார். இவ்வாறாக ஒரே நாளில் பம்பரமாக செயல்பட்ட திருமதி.பழனியம்மாளுக்கு கோடனூர் மற்றும் சீவலாதி ஊராட்சியின் சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

நமது மின்னிதழின் சார்பாகவும் வாழ்த்திகிறோம்.