பத்மா சேஷாத்ரி பள்ளியும்- சிவகங்கை திமுகவும்,பொள்ளாச்சி அதிமுகவும்

பத்மா சேஷாத்ரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது திமுக அரசு.

சபாஷ்…இது போன்ற கொடூரனுக்கு தக்க தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.

பத்மா சேஷாத்ரி பள்ளியை மூட வேண்டும் என ஊடகவியலாளர் சிலரும், திராவிடம் மற்றும் பொது உடமை பேசும் பலரும் உரக்க சொல்லி வருகின்றனர்.

இந்த நேரத்தில் தான் வேறொரு உண்மை நமக்கு உறுத்தலாக வந்து நிற்கிறது.

சிவகங்கை

சில வருடங்களுக்கு முன் சிவகங்கை திமுக மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் கட்சிக்கார பெண்மணியுடன் உள்ள ஆபாச வீடியோ வெளியானது. அதற்கு சமூகத்தில் பல இடங்களில் இருந்தும் கண்டனம் வந்தது.

அவர் மீது திமுக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைவிட கொடுமை….அவரை நாற்பதாயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தனர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள்.

தற்போது அவரும் திமுக அமைச்சரவையில் ஒரு அங்கம்.

பொள்ளாச்சி

அதிமுக அரசின் மாபெரும் களங்கம் பொள்ளாச்சி சம்பவம்.

அண்ணா அடிக்காதீங்க…என்ற அழுகுரல் மனசு உள்ள எந்த மனுடத்தையும் கதற வைத்தது.

அந்த சம்பவத்தில் சம்மந்தப் பட்டவர் என சந்தேகப்படும் நபரின் தந்தையான ஜெயராமன் என்பவர் அதிமுக சார்பாக தற்போது சட்ட மன்ற உறுப்பினர். அவரையும் வெற்றிபெற வைத்துள்ளனர் பொள்ளாச்சி மக்கள்.

Also Read  கிராம சபை தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவரே நிராகரிக்கலாமா?

யாருக்கும் வெட்கம் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்.ஆனால்…ஆசிரியர் என்ற போர்வையில் உள்ள மனித மிருகத்தை தண்டிக்க வேண்டும்.

பள்ளியை மூடவேண்டும் என சொல்வதில் நியாயம் உண்டா…அப்படியெனில்…தப்பு செய்தவற்களை கட்சியை விட்டு நீக்காமல், பதவியை அள்ளித் தரும் இந்த இரு கழகங்களை ஒட்டுமொத்தமாக தடை செய்திட கேட்பதும் நியாயமாகவே தெரிகிறது.

நடைபெறும் தவறில் சாதி,மதம் பார்ப்பது தான் திராவிடமா என கேட்க தோன்றுகிறது.