அரசு கொடுத்த CUG எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சி செயலாளர்களுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அலைபேசி பயன்பாட்டிற்காக தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊராட்சி செயலாளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அரசு பணியாளர்களுக்கும் அரசு சார்பாக தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஊராட்சி செயலாளர் பணி மாறுதலில் வேறு ஊராட்சி சென்றால்,அந்த ஊராட்சிக்கு வழங்கப்பட்ட தொடர்பு எண்ணை பயன்படுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் மாறலாம்.ஆனால், 12525 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட தொடர்பு எண் மாறாது.

ஆனால், அரசால் வழங்கப்பட்ட தொடர்பு எண்ணை பயன்படுத்துவதை விடுத்து, தனக்கு சொந்தமான தொடர்பு எண்ணை பெரும்பாலான ஊராட்சி செயலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தவறை கட்டாயம் சரி செய்யவேண்டும். சொந்த உபயோகத்திற்கு உரிய எண்ணை ஊராட்சி தொடர்புக்கு பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும்.

வாட்ஸ்அப் எண்ணாக தனது எண்ணை பயன்படுத்தும் செயலை ஊராட்சி செயலாளர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அரசு வழங்கி உள்ள தொடர்பு எண்ணை மட்டுமே பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் எண்ணாக அனைத்து அரசு ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை கொண்டுவர வேண்டும்.

வெளிப்படையான நிர்வாகத்திற்காக, அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து தொடர்பு எண்களின் உரையாடல்களையும் சட்டரீதியாக பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால், பாதி குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

Also Read  நாளை கிராம சபை கூட்டம் கட்டாயம் நடக்கும் - தமிழக அரசு அறிவிப்பு

சொந்த எண்ணை பயன்படுத்துபவர்களிடம் ஊடகம் சார்பாக கேள்வி கேட்பது முடியாத செயல். அரசு கொடுத்த தொடர்பு எண்ணை பயன்படுத்துவதை தவிர்த்து வருவதே கள நிலவரமாக உள்ளது.

ஆக…அரசு கொடுத்த எண்ணை மட்டுமே, பணி நிமித்தமாக தொடர்பு மற்றும் வாட்ஸ்அப் எண்ணாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஆகக்கூடிய அடிப்படை தொகையை அரசு வழங்கிட வேண்டும். அடிப்படை பணியாளர் தொடங்கி ஐஏஎஸ் வரை இந்த நடைமுறையை  கடைபிடிக்க வேண்டும்.