இணையவழி ஊராட்சி – ஊராட்சிகளில் கணிணி இருக்கா?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஊராட்சிகளையும் இணையவழியே இணைத்து,வீட்டு வரி உட்பட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் கட்டுவதற்கு ஏற்படுகளை செய்து வருகிறது.

அதற்கான ஆரம்பகட்ட பணியாக,குறிப்பிட்ட அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் திறனறிவு தேர்வை நடத்தி முடித்துள்ளது.

அதெல்லாம் சரி, இன்றும் பெரும்பான்மையான ஊராட்சிகளில் கணிணி இல்லை என்பதே உண்மையான நிலை. இணையத்தின் அடிப்படையான கணிணியே இல்லாத போது, இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்?.

முதலில்,அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் கணிணி பயிற்சி அளித்திட வேண்டும்.ஆனால், ஊராட்சி செயலாளர்களுக்கு பணிச்சுமை மிக அதிகமாக உள்ளது. கணிணிப் பதிவுப் பணி என்பது கூடுதல் சுமையாக முடியும்.

அனைத்து ஊராட்சிகளிலும் கணிணி இயக்குவதற்கு உள்ளூரில் படித்த இளைஞர்களை பயன்படுத்தினால் மட்டுமே இந்த திட்டம் சிறப்பாக நடைபெற வாய்ப்பு உண்டு.

ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் நேரடியாக கண்காணிப்பது,31 வகையான கணக்குகளை நிர்வகிப்பது,வாரம் சிலமுறை  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்வது என ஊராட்சி செயலாளர்களுக்கு அளவுக்கு மீறிய பணி உள்ளது.

கேரளா மாநிலத்தில் ஒரு ஊராட்சியில் குறைந்தபட்சம்  ஐந்துக்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் உண்டு. ஆனால், தமிழ்நாட்டிலோ பெருபான்மையான ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் மட்டுமே.

Also Read  ஊராட்சியின் முதல் கணக்கின் முழு விவரம்

இப்படி அடிப்படை பிரச்சனைகளை சரி செய்தால் மட்டுமே இனையவழி ஊராட்சி என்பது சாத்தியப்படும்.