வணிக வரித்துறையில் புதிய நிர்வாகக் கோட்டங்கள் – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

வணிகவரித் துறையின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

அதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

வணிகவரித்துறையில் தற்போது 12 நிர்வாகக் கோட்டங்கள் இயங்கி வருகின்றன, வணிகவரித்துறையை மறுகட்டமைப்பு செய்யும் ஓர் அங்கமாக7 புதிய வணிகளி நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கப்படும் .

மேலும் வணிகவரித்துறையில் தற்போது 9 நுண்ணறிவு கோட்டங்கள் இயங்கி வருகின்றன. புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்கவும் தணிக்கைகளை அதிகப்படுத்தவும் 6 புதிய நுண்ணறிவுக் கோட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் தமிழ்நாட்டில் நடப்பாண்டின் அக்டோபர் 2021 மாதம் முடிய மொத்தம் (இழப்பீட்டு தொகையுடன்) ரூ. 56,295/- கோடி வசூல் ஆகி உள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் 2020 வரை ஒப்பிடுகையில் 26 சதவிகிதமும், அக்டோபர் 2019 முடிய ஒப்பிடுகையில் 3 சதவிகிதமும் கூடுதல் வளர்ச்சி விகிதமாகும்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வரிஏய்ப்பு மற்றும் வணிகர்களின் குறைகளைக் களைவதற்காக கடந்த 01.07.2021 முதல் புகார் பிரிவு தொடங்கப்பட்டது.

இதுவரை 333 புகார்கள் மின்னஞ்சல் மூலமும் 426 புகார்கள் தொலைபேசி மூலமும் பெறப்பட்டு 638 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read  ஓர் எழுத்தாளரின் சுவடுகள்.! - தமிழ் ஊடக உலகிற்கு விட்டு சென்றுள்ள ஒரு பாடம்

வணிகவரித்துறையில் கடந்த ஆகஸ்ட் 2021, செப்டம்பா 2021 மற்றும் அக்டோபர் 2021 ஆகிய மாதங்களில் நுர்ளாறிவுப் பிரிவு சுற்றும் படை அலுவலர்களால் 1,74,199 வாகனங்கள் மற்றும் 2,21 543 மின் வழிச்சீட்டுகள் தணிக்கை செய்யப்பட்டு 3,256 குற்றங்கள் கண்டறியப்பட்டன. அதன்மீது வரி மற்றும் அபராதத் தொகையாக ரூ.1764 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கரின் அறிவித்ததன்படி  ஏய்ப்பினை தடுக்கும் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் இருந்த 50 சுற்றும்படை குழுக்கள் தற்போது 100 சுற்றும்படை குழுக்களாக உயர்த்தப்பட உள்ளது, மேலும் 100 புதிய வாகனங்களும் வழங்கப்பட உள்ளன.

நுண்ணறிவுப் பரிவு அலுவலர்களால் மேற்கண்ட காலகட்டத்தில் 465 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.25.09 கோடி ரூபாய் வரி மற்றும் அபராதத் தொகையாக வதல் செய்யப்பட்டது. மேலும் ஆய்வின் மூலம் போலி வணிகர்கள் கண்டறியப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் வணிகர் நலவாரியம் சிறப்பாக செயல்படவும், நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், இணைய வழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு வணிகர்கள் நலவாரியத்தில் செப்டம்பர் 2021 வரை சேர்வதற்கான கட்டணத்திலிருந்து விலக்களித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை மார்ச் 2022 வரை நீட்டிக்கப்படும்.

Also Read  பெண்ணான, மர்லின் மன்றோ முதல், ஆணான, சுஷாந்த் சிங் வரை.!

இச்சலுகை காரணமாக 12.334 உறுப்பினர்களாக இருந்த நலவாரியம் கடந்த 3 மாதங்களில் மட்டும் புதிய சேர்க்கையையொட்டி 40,442 பேர் சேர்ந்துள்ளனர். இதில்’ இலவச சேர்க்கையின் உறுப்பினர்களாக 38,135 உறுப்பினர்களும் சேர்க்கை கட்டணம் செலுத்தி 2.307 உறுப்பினர்களும் சேர்ந்துள்ளனர்.

இந்நிகழ்வில் வணிகர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து மரணம் அடைந்த இரு வணிகர்களின் குடும்பத்திற்கு குடும்ப நல உதவி கிட்டத்தின் கீழ் தலா ரூபாய். ஒரு இலட்சத்திற்கான காசோலையை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் திருமதி.ஜோதி நிர்மலாசாமி இ.ஆ.ப., வணிகவரி ஆணையர்  மு.அ. சித்திக், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.