நேரு ஒரு ராசி இல்லா ராசா…அன்பில் அலையில் வீழும் ரோஜா – வம்பளந்தான்

சபரி…கே.என்.நேரு பற்றி ஒரு சுவாரசியமான தகவல் சொல்லட்டா…

மணியா….திமுக வில படிப்படியா உசந்து இன்னைக்கு  துணை பொதுச்செயலாளராக உசந்து நிக்கிறாரு. அன்பில் காலத்திலேயே அரசியல் செய்த விவரமான ஆளு…

அது இல்ல சபரி…அவரோட தேர்தல் ரிக்காட பாரு. எப்பவெல்லாம் அவருடைய ஜெயிக்கிறாரோ அப்பவெல்லாம் திமுக ஆட்சிக்கு வரும் .அந்த ரிக்கார்டு படி போன தேர்தல்ல மட்டும் அந்த கணக்கு தப்பா போயிருச்சு.

அப்படியா…மேல சொல்லு மணி.

ஒரு தேர்தல்ல ஜெயிச்சா அடுத்த தேர்தல்ல தோத்துருவாரு.அது அவரோட ராசி.அந்த ராசி திமுகவையும் தோக்கடிச்சிடும். அதனால…முடிஞ்ச தேர்தல்ல ஜெயிச்சிருக்காரு.ராசிப்படி வரும் தேர்தல்ல தோப்பாரு.திமுகவும் கரை சேராது சபரி.

நீ பெரிய சோசியரு மாதிரி பேசுர…அரசியல் கட்டம் எல்லாம் கிடையாது மணி.

சோசியம் சொல்லல.அவரோட கடந்த தேர்தல் முடிவை வச்சு தான் சொல்றேன். அது மட்டுமில்ல…திமுக வில இருக்கிற முக்கலத்தோருக அன்பில் மகேஷ வளத்துவிட ஆசப்படுறாக.அதனால நேருக்கு வரும் தேர்தல்ல ஆப்படிக்க முடிவு பண்ணிட்டாகலாம்.

கட்சின்னு வந்திட்டா திமுக வில சாதி பாக்க மாட்டாங்க மணி.

அதெல்லாம் கலைஞரு காலத்தில…இப்ப சாதி அரசியல் மட்டுமே நடக்குது. அன்பில் அலையில நேரு தோக்கிறது உறுதின்னு சொல்றாக சபரி..

Also Read  ஆட்டையப் போட்ட ஆய்வாளர்களும்...அறிக்கை விட்ட அரசியல்வாதிகளும்- வம்பளந்தான்

தேர்தல்ல என்ன நடக்கப்போகுதுங்கிறத பொறுத்திருந்து பாப்போம் மணியா..