இலவச மருந்து தர வேண்டும் – மன்றாடும் “குடி”மக்கள் : வம்பளந்தான்

என்னப்பா சபரி டல்லா இருக்கே..!

அப்புறம் என்ன மணியா…! ஊரடங்கு ரத்து சொன்னாங்க ஆனா நம்ம டாஸ்மாக் மேட்டரை பத்தி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லையே..!

அதுக்கா இவ்வளவு டல்லா இருக்க சபரி..!

அப்புறம் என்ன மணியா கோவில் குளத்தை இழுத்து மூடிட்டு இருந்த நேரத்துலே  கூட நம்ம டாஸ்மாக்  கடையை மருத்துவ ரீதியான அடிப்படையிலே திறந்து வச்சாங்க இல்லையா…? அதுவும் போலீஸ் பாதுகாப்போட…!

அது என்ன சபரி மருத்துவரீதியிலே..?

மணியா இது பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாதா…?
கை கழுவுறதக்கு சரக்கு மிக்ஸ் பண்ணி, மருந்தத்தானே கையிலே தேச்சுக்கிறோம்…? அதே சரக்கு நம்ம தொண்டை வலியா வயத்துக்குள்ள போச்சுன்னா கொரோனா பக்கத்திலேயே வராது அப்படின்னு நான் சொல்லல வெளிநாட்டிலேயே சொல்லிட்டாங்க…!

அதுக்கு நம்ம என்னய்யா பண்ண முடியும்…???

அரசாங்கம் எதையெதையோ செஞ்சு செலவு செய்யுது இந்த கொரோனா எதிர்ப்பு திட்டப் பணியிலே இந்த டாஸ்மாக் சரக்கு மேட்டர்ல கொஞ்சம் கவனத்தை செலுத்தி ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எல்லாத்துக்கும் தினமும் ஒரு கட்டிங் இலவசாமாக கூடுத்தா கொரோனா பக்கத்திலேயே வராது…!

அடப்பாவி சபரி என்னய்யா புது கண்டுபிடிப்பு…!

இது ஒன்றும்  புது கண்டுபிடிப்பு இல்லை மணியா…! சரக்கு ஒரு நோய் எதிர்ப்பு கிருமி நாசினி…! இதைத்தான் காலங்காலமா மில்ட்ரியிலே ராணுவ வீரர்களுக்கு எல்லாத்துக்கும் சரக்கு ஒரு கட்டிங் குடுக்குறது வழக்கம் தான்…!

Also Read  தொடர்ந்து விழும் விக்கெட்...திருப்பத்தூர் திமுக தோல்வியை நோக்கி- வம்பளந்தான்

இது என்னய்யா புது மேட்டரா இருக்கு..?

மணியா நான் ராணுவத்துல குடுக்குற.. Regulr Use Medicines பத்தி சொன்னா இது உனக்கு தெரிய மாட்டேங்குதே..!

பரவாயில்லையே சபரி…! ஏதோ புது கண்டுபிடிப்ப பத்தி மட்டும் சொல்றத தெரியுது.. சரி விவரமா சொல்லு..!

மணியா ஆங்கிலத்தில ரோம் லெட்டர்ல X அப்படி இல்லே போட்டா எத்தனை நம்பர்…?

X அப்படின்னு போட்ட 10..?

இதையை மூணு X போட்டா அதாவது… XXX இப்படி போட்டா…?

முப்பது..?

வெரிகுட் மணியா அதைத்தான் மருத்துவ ரீதியா நான் சொல்றது முப்பது நாளும்… அதாவது மாசம் முழுவதும் Regulr Use Medicines சரியான முறையில் அல்லது சரியான அளவில் பயன்படுத்தினால் எந்த நோயும் பக்கத்தில் வரவே வராது..! அப்படி என்று ஆய்வாளர்களின் கருத்து…!

அட அது என்னப்பா Regulr Use Medicine க்கும் டாஸ்மாக் சரக்கும் முடிச்சு போடுற..?

இன்னுமா மணியா உனக்கு புரியல..?
Regulr Use Medicines – இந்த முழு வார்த்தைய கொஞ்சம் சுருக்கி பாரு உனக்கு உண்மை புரியும்..?

அட இதப்பத்தி நீயே சொல்லப்பா..?

Regulr Use Medicines… சுருக்கம் RUM…. அதாவது XXX…RUM…? எதையெதையோ விலையில்லா பொருளா கூடுக்கிற நம்ம அரசாங்கம் இதை தினம் ஒரு சின்ன கட்டிங் மட்டும் கூடுத்துச்சுன்னா…கொரோனா… என்ன பெரிய கொரோனா எந்த வைரஸ்சும் நம்ம பக்கத்திலேயே வரவே வராது.. மணியா..!

Also Read  எல்லாம் சரியாதான் போகுதா? வம்பளந்தான்!

அடப்பாவி இதுதான் உன்னுடைய கவலையா…