அதிமுக அறிக்கையை திருத்தி வெளியிட்ட நமது அம்மா..

அதிமுக தலைமையின் லட்சணம்…

ஆகஸ்ட் 10ந்தேதி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சம்மந்தப்பட்ட இடங்களிலும்,நெருங்கிய வட்டாரங்களிலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நமது அம்மா நாளிதழில் அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தி உள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.இப்படி சட்டத்தை மீறி அரசின் ஒரு அங்கமான ஒரு துறையே செயல்பட்டதை எந்த ஊடகமும்,பத்திரிகையாளர் சங்கமும் கண்டிக்கவில்லை.

பணிக்கு வந்த ஊழியர்களை உள்ளே விட மறுத்தது காவல்துறை. அதனால்,11ம் தேதி வரவேண்டிய நாளிதழ் வரவில்லை.

இந்த அராஜக செயலை கண்டித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கே வந்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கவேண்டும். தமது கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையின் பணி ஒரு நாள் முடங்கியது அவர்கள் தலைமைக்கு மிகப்பெரிய அவமானம்.

அதைவிடக் கொடுமை, அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தமது பத்திரிகை அலுவலகம் ஆழ்வார்பேட்டை “அசோக் சாலை” என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மாபெரும் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் அலுவலகம் செயல்படும் பகுதி “ஆனந்தா சாலை” என்பது கூட தெரியாமல் அறிக்கை தயாரித்து இருப்பதும்,அதில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து போட்டு இருப்பதும் எவ்வளவு பெரிய பிழை.

கண்டன அறிக்கையை படித்தவர்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள் என்று நமது குழும பத்திரிகையான அரசியல் கண்ணாடி இணையத்தில் வெளியிட்டோம்.

அதிமுக தலைமையின் லட்சணம்

இன்று வெளி வந்துள்ள நமது அம்மா நாளிதழில் அசோக் சாலை என அதிமுக தலைமை அறிக்கையில் உள்ளதை திருத்தி “ஆனந்தா சாலை” என்று வந்துள்ளது.

Also Read  எலந்துறை இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

தலைமையின் தவறை திருத்தி வெளியிட்ட நமது அம்மா செயல் பாராட்டத்தக்கது.