ஊராட்சிமன்றங்களில் முரசொலி – இதுதான் நல்லரசா?

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின்  சேவையை  மேம்படுத்தும் நோக்கில்    1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக்  கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன

1. கன்னிமாரா பொது நூலகம் 1
2. அண்ணா நூற்றாண்டு நூலகம் 1
3. மாவட்ட மைய நூலகங்கள் 32
4. கிளை நூலகங்கள் 1926
5. நடமாடும் நூலகங்கள் 14
6. ஊர்ப்புற நூலகங்கள் 1915
7. பகுதி நேர நூலகங்கள் 745
மொத்தம் 4634

 

காலம்காலமாய் ஆளும்கட்சியாக வருபவர்கள் தங்களின் கட்சி பத்திரிகையை நூலகங்களில் கொண்டுவந்து சேர்த்தனர்.

உள்ளாட்சியில் முரசொலி

எந்த கட்சி சின்னத்திலும் போட்டியிடாமல், ஊராட்சியில் உள்ள அனைத்து கட்சியினரின் வாக்குகளை பெற்று பொறுப்பிற்கு வரும் ஒரே அமைப்பு தான் ஊராட்சி மன்றங்கள்.

அப்படிப்பட்ட…12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள் சார்பாக திமுகவின் கட்சி பத்திரிகையான முரசொலியை வாங்கச் சொல்வது எப்படி ஜனநாயக நடைமுறை ஆகும்.

கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக தனது கட்சி பத்திரிகையான நமது எம்ஜிஆர் அல்லது நமது அம்மா பத்திரிகையை ஊராட்சி மன்றங்கள் வாங்கவேண்டும் என வற்புறுத்த வில்லை.

Also Read  பெண்களை இழிவுபடுத்திய திருமா - ஆதரித்த ஸ்டாலின் - கொந்தளித்த எல் முருகன்

இந்த உத்தரவை ஊராட்சி மன்றங்கள் செயல்படுத்தினல் தவறான முன் உதாரணம் ஆகிவிடும்.

அது மட்டுமா….தினகரன்,தமிழ்முரசு,குங்குமம் என சார்பு பத்திரிகைகளையும் வாங்க உத்திரவிடப்படுவது ஊராட்சி அமைப்பையே கேள்விக்குறியாக்கி விடும்.

முப்பது நாட்களில் நல்லாட்சி என்று உரக்க குரல் கொடுக்கும் ஊடகத்தினர் இந்த செயலை நல்லாட்சியின் ஒரு அம்சம் என்பார்களா?

தமிழ்நாடு முதலமைச்சரும், துறை அமைச்சரும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.