திசை மாறும் சூழலில் தேவரின வாக்குகள்

தமிழ்நாட்டில் 80 தொகுதிகளில் வெற்றியை நிர்ணகிக்கும் இடத்தில் முக்குலத்தோர் வாக்கு உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் அணிவித்தது,தனது இனத்தை சார்ந்த சசிகலா அவரோடு கூடவே இருந்ததால் முக்குலத்தோரில் 70 சதவீதத்தினர் அதிமுகவிற்கு வாக்களித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் சசிகாலா சிறைக்கு செல்ல,  தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த நாடாடளுமன்ற தேர்தலில் களம் கண்டார். குறிப்பாக, தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளை வாங்கி உள்ளார்.

வரும் தேர்தலில் முக்குலத்தோர்களின் வாக்கு எந்த கட்சிக்கு செல்லும் என சமுதாயத்தின் முக்கியமானவர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறியதாவது….

ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக எங்கள் ஓட்டு அதிமுகவிற்கு செல்லக்கூடிய வாய்ப்பு குறைவு. பாதி வாக்குகளை அமமுக வாங்கிவிட்டது. எங்களில் ஒரு பிரிவான அகமுடைய சமுதாயத்திற்கு அதிமுகவில் அரசியல் அங்கீகாரம் இல்லை. அதன் எதிரொலியாகத் தான் இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் தோல்வி.

தற்போதைய அதிமுக ஆட்சியில் முக்கியமான துறைகளில் கவுண்டர் சமூகத்தின் ஆதிக்கம் அதிகம். செய்தித்துறையில் எழில் என்பவரை ராஜினாமா செய்யவைத்து,தனக்கு பக்கத்தில் எல்லாமுமாக வைத்து கொண்டது. உளவுத்துறைக்கு தனது சமுதாயத்தினரை வைத்துக்கொண்டது மட்டுமின்றி,வேலுமணி,தங்கமணி இருவருக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வருவது எங்கள் சமூகத்துக்கு மட்டுமல்ல,அனைத்து சமூகத்திருக்கும் மிகப்பெரிய அதிருப்தி நிலவிவருகிறது.

Also Read  அழகப்பபுரம் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

திமுகவில் டி.ஆர்.பாலு,அன்பில் மகேஷ்,ஆத்தூர் பெரியசாமி,தங்கம் தென்னரசு என அனைத்து முக்குலத்தோருக்கு அங்கீகாரம் உள்ளது. அதுமட்டுமின்றி, முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரசேகர் திமுகவின் தலைமைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். அதனால், எங்கள் முக்குலத்தோருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கும் திமுகவை நோக்கி குறிப்பிட்ட சதவீத வாக்குகள் செல்வதற்குரிய வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பான்மையான தொகுதியை பெரும்கட்சியே ஆளும்கட்சியாக அரியணை ஏறும் என்ற யாதார்த்தத்தை இரு கழகங்களும் புரிந்து கொண்டு,அதற்கான தேர்தல் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

சசிகலா வருகையும் முக்குலத்தோர் வாக்கு வங்கியில் மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர்.

தேர்தல் நெருங்கும் வேளையில்,முக்குலத்தோர் எந்த பக்கம் என்பது தெரியவரும்.