தமிழக தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
பிரதமர்,ராகுல் என டெல்லி காற்று தமிழகம் நோக்கி சூரை காற்றாக சுழன்றடிக்க ஆரம்பித்து விட்டது.
மார்ச் முதல் வாரத்துக்குள் கூட்டணியை இறுதி செய்துவிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் களம் காண சென்றுவிடும்.
இந்த நிலையில்….சசிகலாவின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே அவரின் அரசியல் ஆட்டம் ஆரம்பிக்கும். பாஜகவை எதிர்த்து அரசியல் செய்த அம்மாவின் வழியிலே அவரின் பயணம் இருக்கும்.
நிலவை மறைக்கும் மேகமாக அதிமுகவை மறைக்க துடிக்கும் பாஜகவை அகற்றி, சுய சிந்தனைமிக்க அதிமுகவாக மீட்டெடுக்கும் பணியை அதிதீவிரமாக தொடர்வார்.
மோடியா…லேடியா…என்று சொன்ன அம்மாவின் வார்த்தையை தாரக மந்திரமாக கையில் எடுத்து செயல்பட தொடங்குவார்.
அடிமை அதிமுகவை மீட்டெடுப்பதே அவரின் முதல் பணியாக இருக்கும் என்றார்.
-வம்பளந்தான்-