மைனர் ஊராட்சி – மகத்தான பணி

தென்காசி மாவட்டம்

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சிறிய ஊராட்சி நடுவக்குறிச்சி மைனர் பஞ்சாயத்து ஆகும்.

ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களை கொண்ட சிறிய ஊராட்சி. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பொறியியல் பட்டதாரியான சிவா ஆனந்த் என்ற இளைஞர் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிந்து ஓராண்டு நிறைவுக்கு முன்பே பல மக்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நிதி வருமானம் இல்லாத ஊராட்சியை, தனது முயற்சியால் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வரும் அந்த இளைஞரை மனதார வாழ்த்துகிறோம்.

வரும் அரசியல் கண்ணாடி இதழில் விரிவான செய்தியாக வெளியிட உள்ளோம். தன்னலம் கருதாது உழைத்து வரும் இதுபோன்ற இளைஞர்களை பாராட்டுவதும், விருது வழங்குவதும் ஆளும் அரசுகளின் தார்மீக கடமையாகும்.

அவரின் பணிகளில் ஒரு துளி

நம்ம ஊராட்சிக்கு நல்லது நடக்கணும்னு நாம பண்ணுற எல்லா முயற்சிகளுக்கும் இறைவனும் எல்லா வகையிலும் கைகொடுக்கிறார்.

வல்லராமபுரத்தில் கூடுதல் நீராதாரத்திற்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக்கிணற்றில் அபரிமிதமான தண்ணீர்.

இன்னும் குறைஞ்சது 30 வருசத்துக்கு நம்ம ஊருக்கு தண்ணீர் பற்றாக்குறையே இல்லை என்று ஊர்மக்கள் வாழ்த்திச் செல்வதில் அளவிடமுடியாத மகிழ்ச்சி.

என்றும் மக்கள் பணியில்,
Dr.S.சிவஆனந்த்,BE,MBA.,
ஊராட்சி மன்ற தலைவர்,
நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி

Also Read  அரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர்