தேனியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள்

1. ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் அரசுக்கு பல லட்சம் நிதியிழப்பு
ஏற்படுத்தியதனை ஊராட்சி செயலர் திரு.A.குமரேசன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பிறகும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்க ரீதியாக புகார் அளித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து வருவதனை
தவிர்த்து உடனடி நடவடிக்கை எடுக்ககேட்டல்

2. மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருவதற்கு தூண்டுகோலாக உள்ள வளர்ச்சிப்பிரிவு
அலுவலர்களான திரு. சேதுக்குமார், திரு.சிவக்குமார் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தில் இயக்கரீதியாக
புகார் அளித்தும் இன்றுவரை அடிப்படை விசாரணையை கூட தொடங்காமல் தாமதித்து வருவதனை
தவிர்த்து உடனடிநடவடிக்கை எடுக்ககேட்டல்

3. ஆண்டிப்பட்டி ஒன்றியம், கொத்தப்பட்டி ஊராட்சி செயலர்(கூ.பொ)வகித்த திரு.ஞானசேகரன் அவர்களின்
தற்காலிக பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்து மீளபணிவழங்க கேட்டுக்கொள்ளுதல்.

என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஷ்கோ பிராகாஷ் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Also Read  மதுரையில் சார்லஸ் ரெங்கசாமி - திருச்சியில் ஜான்போஸ்கோ பிரகாஷ்

இவர்களின் நியாயமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஏற்று,நடவடிக்கை எடுத்திட வேண்டும்.