மேலநீலிதநல்லூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய தலைவராக சேர்ந்தமரம் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வாசம், ,செயலாளராக நடுக்குறிச்சி மைனர் ஊராட்சியின் தலைவர் சிவ ஆனந்த் BE, பொருளாளராக பட்டாடைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுமதி கனகவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நிகழ்வின் தொகுப்பு:-

மேலநீலிதநல்லூர் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு உருவானது… தலைவர், செயலாளர், சட்ட ஆலோசகர் உட்பட கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்…

வீரசிகாமணியில் உள்ள M.S.மதன் கலையரங்கத்தில் இன்று (08-01-2022) மாலை சின்ன கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.வெள்ளத்துரை பாண்டியன் அவர்கள் தலைமையில், நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.RSM.முத்துப் பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்…

அதன்படி கூட்டமைப்பின் தலைவராக சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.விசுவாசம் அவர்களும், செயலாளராக நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.S.சிவஆனந்த் அவர்களும், துணைத் தலைவராக பெரிய கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.R.பிச்சைப்பாண்டி அவர்களும், இணைச் செயலாளராக குலசேகரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.வெள்ளத்துரை அவர்களும், துணை செயலாளராக மருதங்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் திரு.H.சின்ன பேச்சிமுத்து (எ) தங்கத்துரை அவர்களும், பொருளாளராக பட்டாடைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.K.சுமதி கனகவேல் அவர்களும், சட்ட ஆலோசகராக ஓய்வுபெற்ற BDO திரு.S.கருப்பையா அவர்களும் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சி மன்றத் தலைவர்களாலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்…

Also Read  கருநாகானுத்தான்பட்டி ஊராட்சி - ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

இந்த ஆலோசனை கூட்டத்தில் வடக்கு பனவடலி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.முத்துலட்சுமி யேசுதாஸ் அவர்கள், குருக்கள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மகேஷ் அவர்கள், மேலநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. பொன்னம்மாள் அவர்கள், சேர்ந்தமரம் மஜரா ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.செண்பககனி அவர்கள், உசிலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கனகலட்சுமி அவர்கள், கோ மருதப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.வீரம்மாள் அவர்கள், மகேந்திரவாடி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.செல்வி அவர்கள், மலையன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மாரியம்மாள் அவர்கள், கீழநீலிதநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கோதையம்மாள் அவர்கள், ஈச்சந்தா ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கருப்பசாமி அவர்கள், இலந்தைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுரேஷ் ஜெயலட்சுமி அவர்கள், வெள்ளாளன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஜெயகண்ணன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…

பிரபல தொழிலதிபரான வென்றிலிங்கபுரம் திரு.மதன் சுப்பிரமணியன் அவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பச்சை மை பேனாக்கள் பரிசளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்… வீரசிகாமணி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அரசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்…

இவர்களின் மக்கள் பணி சிறக்க நமது மின்னிதழின் சார்பாக வாழ்த்துக்கள்.