சேலத்தில் மருத்துவ நிதி உதவி வழங்கும் நிகழ்வு

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம ராக்கிபட்டி ஊராட்சி செயலாளர் அன்பு சகோதரி கோமதி அவர்கள் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து சேலம் விநாயகா மிஷன் நிர்வாகத்தின் விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இந்நிலையில் சகோதரியின் உயிரை காப்பாற்ற மருத்துவ உதவி வேண்டி மாநில மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மாநிலம் முழுக்க நமது அன்பு சகோதர சகோதரிகள் சேலம் மாவட்ட மைய தலைவர் அவர்களின் கணக்கில் தொகை வழங்கப்பட்டது . இக்கணக்கில் நாளது தேதிவரை 99020 மருத்துவ உதவிக்காக வரவாகியுள்ளது.

ஒரு லட்ச ரூபாய் நிதியை இன்று திருமதி கோமதி அவர்களின் கணவர் M.ராமதாஸ் அவர்களிடம் சேலம் விம்ஸ் மருத்துவமனையில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் K.மகேஸ்வரன் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் k.சிவசங்கர் மற்றும் வீரபாண்டி ஒன்றிய நிர்வாகிகளS. தங்கராஜ் C. குமார் P.செல்வமுருகன் V.ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் என சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் கே.சிவசங்கர் தெரிவித்தார்.

Also Read  புறப்படுவீர் போராட்ட களத்திற்கு - மாநில பொருளாளர் வேண்டுகோள்