மத்தூர் ஒன்றிய பொருளாளர் நியமனம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,மத்தூர் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய பொருளாளர் பதவி காலியாக உள்ளது.

அதனை பூர்த்தி செய்ய அந்த ஒன்றியத்தைச் சார்ந்த ஒன்றிய தலைவர் திரு.ஜெ. செந்தில் குமார், ஒன்றிய செயலாளர் திரு. மாதேசன் மற்றும் அந்த ஒன்றியத்தில் உள்ள மாவட்ட இணைச் செயலாளர் திருமதி. ஈஸ்வரி ஆகியோரின் ஒப்புதலோடு…

கலர்பதி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி செயலாளர் திரு.சரவணன் என்பவரை மத்தூர் ஒன்றிய பொருளாளராக ஏகமனதாக தேர்வு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட மைய சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.T.செங்கதிர்ச்செல்வன் அவர்களின் பரிந்துரையை ஏற்று திரு.சரவணன் அவர்களை ஒன்றிய பொருளாளராக இன்று முதல் நியமனம் செய்து தலைமை  உத்தரவிட்டுள்ளது.

Also Read  மோரமடுகு ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்