100 ரூபாயில் எதிர்ப்பு சக்தி மருந்து மதுரை மாநகராட்சி அசத்தல்

கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மருந்து பெட்டகத்தை மதுரை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறது.

ரூ.250 மதிப்புள்ள இந்த மருந்து பெட்டகம் ரூ.100-க்கு கிடைப்பதால் மதுரை மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு இதனை வாங்கி வருகின்றனர்.

மேலும், வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை பார்சல் அனுப்புகின்றனர்.

மருந்து பெட்டகத்தை ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.100க்கு கொடுத்து வருகிறது. இந்தப் பெட்டகத்தை வாங்கிச்செல்ல மதுரை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

Also Read  சென்னை மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை விவரம்