2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான
சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை


துலாம் : தொட்டது துலங்கும் முக்கிய விஷயங்கள் சாதகமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.வீட்டு பராமரிப்பு செலவுகள் உருவாகும். சொந்த பந்தங்களின குடும்ப விஷயங்களில் தலையிடவேண்டாம்.
பரிகாரமாக தினமும் அஷ்டலெட்சுமி ஸ்தோத்திரம் படியுங்கள்.


விருச்சிகம் : சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்களிடையை ஒருமித்த கருத்துகள் ஏற்படும். பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வண்டி வாங்குவார்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரமாக ரமணர்,ராகவேந்திரரை நினைத்து தியானம் செய்யுங்கள்.


தனுசு : குழப்பங்கள்,தடுமாற்றங்கள இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். அடமானத்தில் இருக்கும் வீடுகளை மீட்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். தடைபட்டு வந்த குல தெய்வ தரிசனம் மனநிறைவாக அமையும்.
பரிகாரமாக சிவலிங்க அபிஷேகத்திற்கு பால்,பன்னீர் வாங்கி கொடுங்கள்.


மகரம் : கண்டதை நினைத்து குழப்பம் அடைவீர்கள். தாய் வழி உறவுகளால் செலவு ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். பூர்வீக சொத்து சம்பந்தமான இருந்த தடைகள் நீங்கும். நிலம்,தோட்டம், பிளாட் வாங்க பார்த்தவர்களுக்கு நல்ல இடத்தில் அமையும்.
பரிகாரமாக கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.


கும்பம் : புதிய வேலையில் சேர்வதற்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான காற்று வீசும். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். நண்பர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். வளைகாப்பு, சுப முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய மின் சாதன பொருட்களை வாங்குவீர்கள்.
திங்கள், செவ்வாய் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.
பரிகாரமாக கோவிந்தாய நமக என தினமும் கூறுங்கள்.


மீனம் : எதிர்பார்த்த பெரிய தொகை உடனே கைக்கு வரும்.வாடகை, குத்தகை பாக்கி உடனே வசூலாகும். மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி வரும்.நல்ல இடத்தில் வீடு வாடகைக்கு கிடைக்கும்.
புதன், வியாழன் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.
பரிகாரமாக தினமும் ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்.
ஜோதிடர் : பேய்க்குளம் முருகன்,
தொலைபேசி எண் : 6374210675