துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி 28) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 பிப்ரவரி 22 – முதல், பிப்ரவரி 28 வரையிலான

சார்வரியாண்டு மாசி 10 -ஆம் தேதி முதல் மாசி 16 – மாதம் தேதி வரை

துலாம் ராசி
துலாம் ராசி

துலாம் : கணவன் மனைவியிடையிடையை மனகசப்புகள வந்து போகும். பயண திட்டங்களில் தடைகள் மாற்றம் வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

பரிகாரமாக ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி

விருச்சிகம் : எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கணவன்,மனைவியிடையை நெருக்கம் கூடும். பாதியில் நின்று போன வீட்டு வேலையை உடனே தொடங்குவீர்கள். தொழிலில் ஏற்ற தாழ்வு இருந்தாலும் பண புழக்கம் சீராக இருக்கும்.
திங்கள்,செவ்வாய் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக முருகனை வழிபடுங்கள்.

தனுசு ராசி
தனுசு ராசி

தனுசு : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தையிடமிருந்து உதவிகள்கிடைக்கும். பூர்வீக சொத்தில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். பிள்ளைகள் செயல்பாடால் மனவருத்தங்கள் உண்டாகும். கர்ப்பமாக இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
புதன்,வியாழன்,வெள்ளி கிழமைபகல் 12மணி வரை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள்.

மகரம் ராசி
மகரம் ராசி

மகரம் : பெண்களுக்கு இனம் புரியாத கவலைகள் வரும். அரசு ஊழியர்களுக்கு திடீர் இடமாற்றம் வரும். கண் சம்பந்தமான உபாதைகள், செலவுகள் வரும். மகன் திருமண விஷயமாக நல்ல செய்தி வரும். பயண திட்டங்களில் தடைகள் வரலாம்.
வெள்ளி பகல் 12.01 முதல் சனி,ஞாயிறு சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

Also Read  மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் - (ஆகஸ்ட் 10- ஆகஸ்ட் 16)

பரிகாரமாக நவகிரக வழிபாடு செய்யுங்கள்.

கும்பம் ராசி
கும்பம் ராசி

கும்பம் : பூர்வீக சொத்து சம்பந்தமாக குடும்பத்தினரிடையை ஒற்றுமை ஏற்படும். அரசாங்க வேலைகள் உடனே முடியும்.உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் சீராக இருக்கும். வர வேண்டிய பணம் உடனே வரும். புதிய ஆர்டர்கள் உடனே கிடைக்கும்.

பரிகாரமாக சிவனை வழிபடுங்கள்.

மீனம் ராசி
மீனம் ராசி

மீனம் : பிள்ளைகள் செயல்பாடு காரணமாக கோப தாபங்கள் வந்து போகும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் கூடும். தொண்டை,பல் சம்பந்தமான உபாதைகள் வரும். கவனமாக பேசுங்கள். கெளரவ பட்டம்,விருதுகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் விட்டு கொடுத்து செல்லுங்கள். தொழில் நன்றாக இருப்பதால் பெரிய ஆர்டர் கைக்கு வரும்.

பரிகாரமாக ஸ்ரீராமரை வழிபடுங்கள்.

ஜோதிடர் : பேய்க்குளம் முருகன்,

தொலைபேசி எண் : 6374210675