துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 15 – பிப்ரவரி 21) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 பிப்ரவரி 15 – முதல், பிப்ரவரி 21 வரையிலான

சார்வரியாண்டு மாசி 03 -ஆம் தேதி முதல் மாசி 09 – மாதம் தேதி வரை

துலாம் ராசி
துலாம் ராசி

துலாம் : நிலம், பணம் வாங்க ஒப்பந்தம் செய்வீர்கள். தாய் வழி உறவால் வீண் செலவுகள் உண்டாகும். அரசியல்,பொது விவாதம் வேண்டாம். புது வண்டி வாங்குவீர்கள்.
வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக : சரபேஸ்வரரை வழிபடுங்கள்.

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி

விருச்சிகம் : டென்ஷன் அடைவீர்கள். கணவன்,மனைவிக்கிடையை உடல் நலம் பாதிக்கப்படலாம். நண்பர்களிடையை கருத்து வேறுபாடுகள் வந்து போகும். உத்யோகத்தில் மாற்றம் வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி யோகமுள்ளது.

பரிகாரமாக : குல தெயவ வழிபாடு செய்யுங்கள்.

தனுசு ராசி
தனுசு ராசி

தனுசு : சொத்து சம்பந்தமாக அவசர முடிவுகள் வேண்டாம். மாமியார் மருமகளிடையை மனகசப்புகள் வரும். கண், பல் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. தந்தையிடம் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள்.

பரிகாரமாக சிவனை வழிபடுங்கள்.

மகரம் ராசி
மகரம் ராசி

மகரம் : தந்தை வழியில் மருத்துவ செலவுகள் வரும். சுப விசேஷங்கள் நடக்கும். பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். பொருள்,பண சேர்க்கை உண்டு. மகன்,மகளுக்கு நல்ல இடத்து சம்பந்தம் வரும்.வழக்கில் சமாதனமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. டென்ஷன் வரும் ஆதலால் நிதானமாக செயல்படுங்கள்.

Also Read  மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம்- (ஆகஸ்ட் 17 - ஆகஸ்ட் 23)

பரிகாரமாக வராகி அம்மனை வழிபடுங்கள்.

கும்பம் ராசி
கும்பம் ராசி

கும்பம் : எதையும் எளிதாக சமாளிப்பீர்கள். அலைச்சல் இருப்பதால் சாப்பிடமுடியாத சூழ்நிலை வரும். தாயார் மூலம் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் வரும். வீட்டு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கலாம். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.

பரிகாரமாக : சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்.

மீனம் ராசி
மீனம் ராசி

மீனம் : மகிழ்ச்சியான செய்திகள் வரும். நிறையா பணம் வருவதால் அடமான நகைகளை மீட்பீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகளிடையை மனகசப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் நன்றாக நடப்பதால் தொழிலை விரிவுபடுத்தீவீர்கள்.

பரிகாரமாக ஸ்ரீராமரை வழிபடுங்கள்.