துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 08 – பிப்ரவரி 14) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 பிப்ரவரி 08 – முதல், பிப்ரவரி 14 வரையிலான

சார்வரியாண்டு தை 26 -ஆம் தேதி முதல் மாசி 02 – மாதம் தேதி வரை

துலாம் ராசி
துலாம் ராசி

துலாம் : இரவு நேர கார் பயணத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் வரும். புது முயற்சிகள் வேண்டாம். சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

பரிகாரமாக ஆஞ்சநேயரை துளசி மாலை சாத்தி வழிபடுங்கள.

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி

விருச்சிகம் : அதிகமாக சிந்திப்பதால் மன உளச்சல் வரும். மகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் வரும். சொத்து சம்பந்தமாக நல்ல முடிவுகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பதவி, பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரமாக தினமும் சிவனை வழிபடுங்கள.

தனுசு ராசி
தனுசு ராசி

தனுசு : சொத்து சம்பந்தமான வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். வீட்டில் அடுத்தடுத்து சுபவிசேஷங்கள் வரும். கணவன்-மனைவியிடையை கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பண விஷயமாக நண்பர்களிடையை பிரச்சினைகள் வரலாம். பண வரவுகள் சீராக இருக்கும்.

பரிகாரமாக கந்தகஷ்டி,கந்த குரு கவசம் படிக்கலாம்.

மகரம் ராசி
மகரம் ராசி

மகரம் : எதிர்பார்த்த பணம் உடனே கிடைக்கும். மாமனார் வகையில் செலவுகள் வரும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். தாயாரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பேரன்,பேத்திகள் மூலம் செலவுகள் உண்டாகும்.

Also Read  நடிகர் விமல் படத்திற்கு இடைக்கால தடை - நீதிபதி அதிரடி உத்தரவு

பரிகாரமாக பைரவரை வழிபடுங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்.

கும்பம் ராசி
கும்பம் ராசி

கும்பம் : புதிய முயற்சிகளை தள்ளி போடவும்.மனதில் குழப்பமான எண்ணங்கள் தோன்றி மறையும். பயண திட்டங்களில் தடை திடீர் மாற்றங்கள் வரலாம். தாய் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். வியாபாரம் சீராக இருக்கும்.புதிய முதலீடு வேண்டாம்.

பரிகாரமாக விநாயகரை வழிபடுங்கள.

மீனம் ராசி
மீனம் ராசி

மீனம் : குழப்பமான மனநிலை வரும். தாய் வழி உறவுகளால் செலவுகள் வரும். சுபவிசேஷ தேதியை முடிவு செய்வீர்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும். புது வண்டி வாங்குவீர்கள். வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.

பரிகாரமாக நவகிரக வழிபாடு செய்யுங்கள்.