இயற்கையை காக்க பிளாஸ்டிக்கை ஒழிப்போம் – பெருமைப்படும் வகையில் பிரதாபராமபுரம் ஊராட்சி

வணக்கத்திற்குரிய பிரதாபராமபுரம் ஊராட்சி பொதுமக்களின் கவனத்திற்கு நமது ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் பிரதாபராமபுரம் நெகிழி மறுசுழற்சி மையம் ஊராட்சி மூலமாக துவங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய நெகிழிப் பைகள் இதர நெகிழிப் பொருட்கள் தண்ணீர் பாடல்கள் போன்றவற்றை இனி குப்பை தொட்டிகளில் வீச வேண்டாம் தங்களின் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு கிலோ 8 ரூபாய் என ஊராட்சி மூலமாக வாங்குகிறோம்.

தாங்கள் வழங்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு ஒரு கிலோ 37 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

நாகை மாவட்டம் முழுவதும் உள்ள தார் சாலைகளுக்கு கட்டாயம் நமது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரதாபராமபுரம் நெகிழி மறுசுழற்சி மையம் மகளிர் குழுவின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது துவங்கப்பட்டு 15 நாட்களுக்குள் சுமார் 1200 கிலோ நெகிழியை மறுசுழற்சி செய்து விற்பனை செய்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்  என ஊராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த ஊராட்சியை போல மற்ற ஊராட்சிகளும் செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த செய்தியை நமது மின்னிதழ் வெளியிடுகிறது.

Also Read  திருவிடவாசல் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்