பணிச்சுமையில் இருந்து விடுத்தலைக்காகவே விடுப்பு எடுக்கும் போராட்டம்

ஊராட்சி செயலாளர்களின் கவனத்திற்கு நமது துறை எந்த பணியை கொடுத்தாலும் செய்து முடிப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம் .

ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லை இதுதான் தவறான புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்ய இயலுகிறது.

மேலும் தற்போது வரி வசூல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பதிவேடுகளை ஆய்வு செய்ய குழு வருகை உள்ளாட்சி நிதி தணிக்கை ஊராட்சி தணிக்கை ஆகியவற்றிற்கான பதில்கள் தயார் செய்தல் தணிக்கைக்கு ஆவணங்கள் தயார் செய்தல் உதவி இயக்குனர் தணிக்கை உள்ளாட்சி நிதி தணிக்கை ஆகியவற்றிற்கு தயார் செய்தல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் வீடுகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தல் நம்ம ஊரு சூப்பர் பணிகள் செய்தல் மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சொல்லுகின்ற பணிகள் மக்கள் நலப் பணிகள் செய்தல் இத்தனை பணிகளையும் இன்னும் எண்ணற்ற பணிகளையும் காலதாமதம் இல்லாமல் ஒரே நேரத்தில் பணி செய்ய நமது துறையால் உத்தரவிடப்படுகிறது.

இதனால் மன அழுத்தம் உண்டாகிறது எந்த பணியை செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் திட்டமிட்டு பணி செய்ய முடியாத சூழ்நிலை இவ்வாறு நமது நாட்களும் நேரங்களும் திட்டமிடாமல் செலவழிந்து கொண்டிருக்கின்றது இதை மாற்றம் செய்வது நாங்கள் பணிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் எவ்வளவு பணிகள் கொடுத்தாலும் ஆனால் அதற்கு தகுந்த நாட்கள் தேவை என்பதுதான் எங்கள் கோரிக்கை.

Also Read  கிராம மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் - வண்டல் ஊராட்சி தலைவர்

இதை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநில மையம் அறிவுறுத்தலின்படி வருகின்ற 12ஆம் தேதி முதல் திங்கள் முதல் புதன்கிழமை வரை ஊதியமில்லா விடுப்பு போராட்டம் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது

எனவே இந்த அரசின் கவனத்தை இருக்கக்கூடிய போராட்டம் நமக்கான போராட்டம் நமது உரிமைக்கான போராட்டம் இதில் நாம் சங்க வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஊதியம் இல்லா விடுப்பு கடிதம் வழங்கி நமது ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டுமாறு கேட்டுக் கொண்டு முயற்சி செய்தால் முடியாதது ஏதுமில்லை முயன்று தான் பார்ப்போம் முடியும் நம்மால் முடியும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்.

சங்கரன்கோவில் குமார் மாநில பிரச்சார செயலாளர்