கிருஷ்ணகிரி ஊரக உள்ளாட்சி துறை அனைத்து பணியாளர்களின் போராட்ட அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் உள்ள தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

வருகின்ற 18 .10. 2021 ஆம் தேதியில் நடைபெறுகின்ற நமது அமைப்பும் மற்றும் நமது தாய் சங்கமான தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் இணைந்து நடத்தும் நமக்கான ஐந்து வகையான போராட்டத்தின் முதல் போராட்டமான அந்தந்த ஒன்றியங்கள் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 18.10.2021நடைபெற இருக்கிறது.

பத்து ஒன்றியங்களில் உள்ள ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து நமது அமைப்பின் வழிகாட்டியும் பாதுகாவலர் மான இரு மாபெரும் தலைவர்களான  மதுரை சார்லஸ் ரங்கசாமி  மற்றும் இளம் சிங்கம் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்கள் அறிவித்தலின் படி அந்தந்த ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள் ,தூய்மை காவலர்கள் ,சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் பணி செய்கின்ற ஒன்றிய அனைத்து நிலை பணியாளர்கள் ஒன்றிணைத்து ஐந்து கட்ட போராட்டத்தை அனைத்து மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்கும் வண்ணம் இன்புற செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக இருகரம் கூப்பி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

Also Read  வீதம்பட்டி ஊராட்சி - உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

இவன் தி.செங்கதிர் செல்வன் மாவட்டதலைவர் /மாநில அமைப்புச் செயலாளர்

இரா.ராதாகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் மாநில இணைச் செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம்