பெங்களூரிலிருந்து கொங்குமண்டலம் – சசிகலா திட்டம்

நான்கு வருட சிறைத்தண்டனையும்,கொடிய கொரோனாவிலும் இருந்து விடுபட்டு,சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா.

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்…

காரில் கழகத்தின் கொடி கட்டி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். பல முக்கிய தலைவர்களிடம் தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருகிறார்.

அவருக்கு எதிர்ப்பாக கிளம்பி வரும் முனுசாமி,ஜெயக்குமார்,சண்முகம் போன்றவர்களின் கலகக் குரல்களை உன்னிப்பாய் கவனித்துவருகிறார்.

குறிப்பாக,தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் தனக்கு செல்வாக்கு என ஊடகங்களில் வரும் செய்திகளை உடைத்தெரிவது தான் தனது முதல்வேலை என்ற முடிவிற்கு வந்துள்ளார்.

பெங்களூரில் இருந்து நேராக புரட்சிதலைவியின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு,நேராக தஞ்சாருக்கு சென்று கணவர் நடராஜனின் சமாதியில் மரியாதை செலுத்துவார்.

தனது முதல் அரசியல் பயணத்தை கொங்கு மண்டலத்தில் இருந்து அதிரடியாக ஆரம்பிக்க முடிவெடுத்துவிட்டார். கட்சிக் கொடியை காரில் கட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று கூறிய அமைச்சர் சண்முகத்தின் விழுப்புரம் வழியாக கொங்கு மண்டலத்திற்கு அதிமுக கொடிகட்டி பயணத்தை தொடங்குவார்.

எந்தவிதமான எதிர்ப்புகள் வந்தாலும் சந்திக்க சசிகலா தயாராகி விட்டதாக நம்மிடம் கூறினார் சசிகலா வட்டாரத்திற்கு நெருக்கமான நபர்.

-வம்பளந்தான்-

Also Read  விஜயகாந்த் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை - கவலையில் குடும்பத்தினர்