பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.

படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்கிறார்.

ராமாயண கதைப்படி சீதாவின் கதாபாத்திரமும் முக்கியமானது தான். ஆதலால் இப்படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்திய தகவலின்படி நடிகை கீர்த்தி சுரேஷ் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  எனக்கு அந்த ஹீரோயின் தான் வேணும் - அடம்பிடிக்கும் ஜெயம் ரவி