காவிய பூசினா என்ன? சாணிய பூசினா என்ன? வம்பளந்தான்

என்ன சபரி ரெண்டு நாளா ஆள காணோம்…!

மணியா ஆரியர் கூட்டம்… பெரியவருக்கு காவியை பூசிட்டானுக அதனால போராட்டத்துக்கு போனேன்..

 

காவி என்ன…காவி… பெரியவருக்கு பெயிண்ட் அடிச்சுட்டானுகன்னு… சொல்லு….. அதான் கரெக்ட்…!அந்த பெயிண்ட் அடிச்ச பையன் என்ன ஐய்யரா…? ஐயங்காரா….? எது எப்படியோ உங்களுக்கு இந்து மதத்தை ஒழிக்கனும் அவ்வளவு தானே மேட்டர்..!

மணியா…. நாங்கள் இந்துமதத்தை எதிர்க்கவில்லை பார்ப்பானியத்தை பிராமண அட்டகாசத்தை எதிர்க்கின்றோம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கின்றோம்.

அப்படின்னா… பார்ப்பான் பூஜை செய்யும் கோயிலுக்கு போக மாட்டீங்க…


அங்கு பார்ப்பனர்களுடைய ஆதிக்கம், கருவறை முதல் எல்லாமும் அவர்கள் அட்டகாசம். அதுனால செல்லமாட்டோம்

சரி சபரி.. பிராமணரே இல்லா கிராம தெய்வங்களான சுடலைமாடன், அய்யனார்…., இசக்கி அம்மன் கோவிலுக்கு போனா என்ன…?

மணியா தெரியாத மாதிரி பேசாத அது .. அது மூட நம்பிக்கை

இந்துமதத்துக்கு எதிரி இல்லைன்னு சொல்றீங்க , பிராமணன் மட்டும் தான் எதிரின்னு சொல்ரீங்க பின்னர் கிராம கோயிலுக்கு வந்தா என்னவாம்…?

அதாவது அது வந்து… மதம் மனிதனை மிருகமாக்கும், ம்…ம்… சுடலை கோவிலில் கிடா வெட்டி ரத்தம் குடிப்பார்கள் .. அய்யகோ… அது கொடுமை… காட்டுமிராண்டிதனம்…!

Also Read  கொரோனா குரங்குகள்!!!வம்பளந்தான்

முஸ்லிம் ஆடுவெட்டி பிரியாணி கொடுத்தால், கிறிஸ்தவன் வான்கோழி வெட்டி விருந்து கொடுத்தால் போவீங்க அப்படித்தானே..?

மணியா…. அது மனித நேயம், மானிட சகோதரத்துவம்…!

அந்த மண்ணாங்கட்டி நேயத்தை சுடலை கோவிலும்… அய்யனார்… இசக்கி அம்மன் கோவிலும் காட்டுனா என்ன? அங்குதான் பாப்பான் இல்லையே , சமஸ்கிருதமும் இல்லையே… அதைவிட கருவறையே இல்லையே…!

இல்ல மணியா…. அது மூட நம்பிக்கை..!

நான் உங்க நம்பிக்கையினை சொல்லட்டுமா?

ம்…. சரி… சொல்..!

உங்கள் எதிரி பாப்பானோ சமஸ்கிருதமோ அல்ல, உங்கள் எதிரி இந்திய மதம் உங்கள் எதிரி, இங்குள்ள கலாச்சாரம் எதிரி…. இங்கு எதெல்லாம் உடைச்சா…. வெளிநாட்டுக்காரனுடையா…. அந்நிய சக்தியும் வளரமுடியுமோ அதுக்கான புரோக்கர்கள் நீங்கள்…!

மணியா அசிங்கமா புரோக்கருன்னு பேசாத..!

சரி அப்பா நீங்க ஒரு மீடியேட்டருன்னு வச்சுக்கோ… ஓகே… அப்படியானால் பாப்பான் இல்லா இந்துகோவில்களுக்கு வா, பிரியாணிக்கும் கேக் துண்டுக்கும் ஓடும் நீ, சர்க்கரை பொங்கலுக்கும் கிடா வெட்டுக்கும் வா

இதோ பார் மணியா தூண்டாதே…!

நான் பிரிவினையை தூண்டறனா…?இதோ பார் இது பாப்பான் கோவில் இல்லை….. சமஸ்கிருத மந்திரமும் இல்லை…! சுத்தமான ஒரிஜினல் சூத்திர சாதியின் தெய்வங்களே, அங்கு இருக்கறவங்க எல்லாம் அக்மார்க் சூத்திரர்களே, வா வந்து அவர்களோடு வணங்கி, திருநீறு பூசி கடாவெட்டில் கலந்து ஜாலியா என்ஜாய் பண்ணு…!

Also Read  இது கந்தனின் திருவிளையாடலா? வம்பளந்தான்

அது எங்கள் கொள்கைக்கு எதிரானது மணியா…!

அட சும்மா வாப்பா, சாதி ஒழிக்க வந்தவனல்லவா நீ, சமத்துவம் பேண வந்தவன் அல்லவா நீ, போராளி அல்லவா நீ … வா மனிதநேயம் மானிட நேயம் வளர்ப்போம்….சபரி..!

மணியா தேவையில்லாத வம்பு பண்ணாத…!

பார்ப்பான் வேறு….! இந்துமதம் வேறு…! முன்னோர் வழிபாடு வேறு அப்படின்னு சொன்னவன் நீதானே, வா.. இசக்கி அம்மன் கோவிக்கு வா….

மணியா…. நீ ஒரு…. சங்கி , ஆரிய அடிவருடி…!

கல்லா இருக்கிற தெய்வ சிலை பேசுமா…? அப்படினு பேசுறவங்கதானே நீங்க….?

அதுல என்ன சந்தேகம் மணியா…!

அப்ப பெரியார் சிலைக்கு பெயிண்ட் அடிச்சதனாலே…. பெரியார் வந்து உங்க கிட்ட ஏதாவது சொன்னாரா..?

மணியா போதும் இதோட நிறுத்திக்குவோம் தேவையில்லாத வம்ப வளக்காதே….!

எத்தனை காக்கா குருவி செல…. மேல உக்காந்து கக்க போகுது…. அதை எல்லாம் புடிச்சு எந்த செக்சன்லே….. கேஸ் போடுவீங்க….. சபரி..!

ஒன்கிட்ட பேசினா என் மண்டை மூளை எல்லாம் குழம்பிரும் மணியா நான் வரேன்…!