கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் திணறிய 4 வீரர்கள் டிரைவர் வேலை பார்க்கும் அவலம்

இந்தியாவில் பணம் அதிகமாக புரளும் ஒரு விளையாட்டு கிரிக்கெட். ஆனால் இது இந்தியாவில் மட்டும் தான் வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கே கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் மதிப்பு குறைவு தான். மற்ற நாடுகள் அனைத்திலும் கிரிக்கெட் வீரர்களுக்கு, இந்தியாவில் கொடுக்கும் அளவிற்கு சம்பளமும் கிடையாது வசதி வாய்ப்புகளும் கிடையாது. உதாரணத்திற்கு இலங்கை, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளில் கிரிக்கெட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது.

இந்தியாவைப் பொருத்தவரை ரோடேஷன் முறையில்தான் வீரர்களை விளையாட வைக்கின்றனர். ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, 20 ஓவர் போட்டி என அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட வீரர்களை வைத்துக்கொண்டு மற்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது என சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்துகின்றனர். அது போக நிறைய வீரர்கள் இந்திய அணியின் கதவை தட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் வாய்ப்பு கிடைத்து பின் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அப்படி கழட்டி விடப்பட்ட வீரர்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்தாக வேண்டும்.

1. சுராஜ் ரண்டிவ்: இவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இலங்கைக்காக 31 ஒருநாள் போட்டி, 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல போட்டிகளை இலங்கைக்காக வென்று கொடுத்துள்ளார். இவர் இலங்கை அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இவர் பஸ் டிரைவராக தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read  சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

2. சிந்தக ஜெயசிங்கே: இவரும் இலங்கையை சேர்ந்த ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் ஆவார். இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். இவர் முதல் தர போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். பின்னர் அணியில் இருந்து ஓரங்கட்டிய பின் ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக தன் வாழ்க்கையை நகர்த்துகிறார்.

3. வட்டின்சன் மயங்கே: இவர் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர். இவர் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். மயங்கே அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜிம்பாவே நாட்டில் இனரீதியான ஒரு பிரச்சனை கிரிக்கெட் போட்டியில் உண்டு. அணியிலிருந்து விலகிய பின் இவரும் பஸ் டிரைவராக மாறியுள்ளார்.

4. அர்ஷத் கான்: இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆப் ஸ்பின்னர். 9 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் டெண்டுல்கர் விக்கெட்டை கூட எடுத்துள்ளார். இவர் தனது வாழ்க்கையை ஓட்டுவதற்காக கிரிக்கெட்டுக்கு பின் டாக்ஸி டிரைவராக மாறியுள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இவரை தொடர்பு கொண்டு பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச்சாக பதவி கொடுத்துள்ளது.