அரசாணையை மீறிய உத்தரவினை பிறப்பிப்பதா?-மாநில தலைவர் அறிக்கை

ஜான்போஸ்கோ பிரகாஷ்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது..

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றிவரும் 12525 கிராம ஊராட்சி செயலர்கள் பல்வேறு நெருக்கடி நிலையை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையை தவிர்த்திட கோரி கடந்த 12,13,14 ஆகிய தினங்களில் தமிழகமெங்கும் 9000க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் 03 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுத்து அரசின் கவனத்தை ஈர்த்ததுடன் அரசோடு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.இரண்டாம்கட்டமாக வரும் செவ்வாயன்றும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்தம் உள்ள 248 ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களில் 84 பேரை மட்டும் நிர்வாக நலன் என காரணமிட்டு ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இது அரசாணையை மீறிய செயலாகும்.இது தமிழ்நாடு ஊராட்சி செயலர் பணிவிதி அரசணை எண் 72 ஐ மீறிய உத்தரவாகும்.மேலும் ஊராட்சி சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாணை பிறப்பிக்க உள்ள இச்சூழலில் மாவட்ட நிர்வாகமே தானாக சட்டத்தை நேரடியாக பயன்படுத்தியுள்ளது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல..

கோவை மாவட்ட நிர்வாகம் ஊராட்சி செயலரை ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதல் செய்துள்ள உத்தரவினை உடனடியாக ரத்து செய்திட வேண்டுகிறோம்..அதே நேரத்தில் பணிவிதிகள் அரசாணை சில நாட்களில் பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பின்பற்றி தற்போது பணிபுரியும் ஒன்றியத்துக்குள் பணிமாறுதல் உத்தரவை பிறப்பிக்கவும் வேண்டுகிறோம்

Also Read  பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்

இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்