தூய்மை பணியாளர்களுக்கு காப்பீட்டு தொகை – அறம் செய்வோம்  அறக்கட்டளை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து முள்ளிப்பட்டு கிராம ஊராட்சி பகுதியில்….! கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் இந்த காலகட்டத்தில் அல்லும் பகலும் ஓயாமல் கிராம மக்களின் ஆரோக்கியம் நலன்கருதி, கிராமத்து தெருக்களை தூய்மைப் படுத்திய, முள்ளிப்பட்டு ஊராட்சியின் நிரந்தரம் இல்லாத தற்காலிக தூய்மைப் பணியாற்றினார்களான… கொரோனா போராளிகள்…. மலர், குப்பு, பிரேமா, மஞ்சுளா, ஜெயராஜ்… ஆகியோரின் நலத்தின் மீது அக்கறை கொண்ட முள்ளிப்பட்டு ராசியில் செயல்பட்டுவரும்.

அறம் செய்வோம்  அறக்கட்டளை சார்பில் தலா 75000 ரூபாய்க்கு(எழுபத்து ஐந்து ஆயிரம்) ஆயுள் காப்பீடு எடுத்துத் தந்துள்ளனர் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்

காப்பீட்டு சான்றிதழை தூய்மை போராளிகளுக்கு ஆரணி வட்டாட்சியர் தியாகராஜன் அவர்கள் வழங்கி பெருமை சேர்த்தார்.

கொரோனா போராளிகளுக்காக வழங்கப்பட்ட காப்பீட்டு கட்டணத்தை இருபது வருடங்களுக்கு, அறம் செய்வோம் அமைப்பே கட்டும்,
என்பது குறிப்பிடத்தக்கது என்றார் சமூக சேவகர் பெருமாள்…!

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

சங்கர மூர்த்தி
சங்கர மூர்த்தி
Also Read  கச்சனம் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்