ஊரக வளர்ச்சித்துறை பணிகளை ஆய்வுசெய்ய வருவாய்துறை அலுவலரை நியமித்த உத்தரவை உடனே திரும்ப பெறுக – மாநில தலைவர் கோரிக்கை

சார்லஸ் ரெங்கசாமி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறும் போது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல அலுவலராக பணியாற்றியவர் ஓய்வு பெற்ற நிலையில் அவ்விடத்திற்கு மண்டல ஆய்வு அலுவலராக வருவாய்துறையை சார்ந்த வருவாய் கோட்டாட்சியரை நியமித்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்..

இந்த உத்தரவு ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஊரக வளர்ச்சித் துறைக்கு வருவாய் துறை சார்ந்த ஒரு அலுவலரை நியமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல..

இந்த உத்தரவை உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும்..

இதே நிலை நீடிக்கும் என்ற சூழ்நிலையில் கிராம ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை ஊக்குவித்து வீடுகளை கட்ட வருவாய்த்துறையினருக்கு சிறப்பு உத்தரவை பிறப்பிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்

Also Read  உங்கள் ஊராட்சியின் கட்டாய கடமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?