சிறுகீரையில் சத்தான இட்லி செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் :

இட்லி மாவு- 1 கிலோ
சிறுகீரை – 1 கட்டு
சிறுபருப்பு – 100 கிராம்
காய்ந்தமிளகாய் – 6
தக்காளி – 1
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 4 பல்

செய்முறை :

முதலில் கீரையை ஆய்ந்து நன்றாக தண்ணீரில் அலசி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் சிறுகீரை ஆகியவை சேர்த்து 1 விசில் வரும் வரை விடவும்.

பின்னர் வெந்த கீரையை மிக்சியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்தால் சுவையான.. அரோக்கியம் மிக்க சிறுகீரை இட்லி தயார்…

Also Read  குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று வருமா? அதன் அறிகுறிகள் என்ன?