பரவசமூட்டும் பரங்கிக்காய் அல்வா செய்வது எப்படி?

பரங்கிக்காய் அல்வா
பரங்கிக்காய் அல்வா

இதுவரை காய்கறிகளைக் கொண்டு செய்யும் அல்வாக்களில் கேரட் அல்வாவைத் தான் வீட்டில் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இனிப்பு பூசணிக்காய் என்னும் பரங்கிக்காய் கொண்டு அல்வா செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு பரங்கிக்காய் அல்வாவை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

மஞ்சள் கல்யாண பூசணி – 1/4 கிலோ (துருவல்),
வெல்லத்தூள் -200 கிராம்,
பால் – 20 மி.லி.,
நெய் – 50 கிராம்,
முந்திரி – 30 கிராம்,
திராட்சை – 30 கிராம்,
வெள்ளரி விதை – 30 கிராம்,
பால் கோவா- 30 கிராம்.

செய்முறை

சிறிது நெய் விட்டு ஒரு கடாயில் முந்திரி, திராட்சை, வெள்ளரி விதையை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். துருவிய பூசணிக்காயை அதே நெய்யில் வறுத்து பின்பு பால் ஊற்றி வேக வைக்கவும். பூசணிக்காய் பாதி பதம் வெந்தவுடன், வெல்லம் சேர்த்து மேலும் வேக வைக்கவும். பின்பு பால்கோவா சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வரும் வரை நெய் விட்டு சுருண்டு வரும் வரை கிளறவும். பின்பு முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை எடுத்து தூவவும்.

Also Read  மன அழுத்தத்தை குறைக்கும் பிரியாணி இலையின் நன்மைகள்