ஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா – செய்வது எப்படி?

அவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

தேவையான பொருட்கள் :

அவல் – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 2
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உடைத்த உளுந்து – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த்துருவல் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அவலை அலசி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்த பின்னர் தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.

பாசிப்பருப்பை மெத்தென்று வேக வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் அதில் வெந்த பருப்பு, ஊறிய அவல், தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

அவல் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

 

Also Read  ஆடிபட்ட இயற்கையில் விளைந்த நெல் விதைகள் கிடைக்கும் இடங்கள்