அல்வாயின் வரலாறு சொக்கம்பட்டியில் தொடங்கியதாம்!

அல்வா என்றால் திருநெல்வேலியும், இருட்டு கடையும் ஞாபகத்திற்கு வரும்.ஆனால், அல்வாவின் ஆரம்பம் தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி தானாம்.

சொக்கம்பட்டி ஜமீன் வடக்கில் யாத்திரை சென்றபோது, ராஜஸ்தானில் இந்த இணிப்பை உண்டு மகிழ்ந்திருக்கிறார். அல்வா செய்யும் குடும்பத்தை தன்னுடனே சொக்கம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்படி தமிழகம் வந்ததுதான் அல்வா. காலப்போக்கில் திருநெல்வேலியில் இந்த குடும்பத்தை சார்ந்த உறவினர் ஆரம்பித்தது தான் இருட்டைக்கடை.

ஆக…தமிழகத்தில் அல்வாவின் ஆரம்பம் சொக்கம்பட்டி தான். தற்போதும் அந்த பழமையான கடை சொக்கம்பட்டியில் உள்ளது.

Also Read  எரணம்பட்டி ஊராட்சி - போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி