மாநில அரசுக்கு ஜிஎஸ்டி வரி – ஊராட்சிகளுக்கு கனிமவள வரி

ரத்தமும் – சட்னியும்

மாநில வரி வருவாயை ஜிஎஸ்டி என்ற பெயரில் மத்திய அரசு தனக்கு கீழே கொண்டு சென்றது. வசூலிக்கப்படும் வரியில் மாநில அரசின் பங்கை காலநிர்ணயம் முறையாக இன்றி வழங்குவதாக மாநில அரசு மத்திய அரசை நோக்கி குற்றச்சாட்டு வைக்கிறது.

அதேவேளை…ஊராட்சி எல்லைக்குள் வரும் கனிமவளங்கான மணல்,மலைகளில் வரும் வருவாய் நேரடியாக மாநில அரசின் கனிமவளத்துறைக்கு சென்றுவிடுகிறது.

அதன் பிறகு, உரிமை உள்ள ஊராட்சிக்கு குறிப்பிட்ட சதவீத வருவாயை கனிமவளத்துறை வழங்குகிறது. அதுவும் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதுவும், ஊராட்சியின் முதல் கணக்கில் வரவு வைக்காமல்,மூன்றாவது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆக…மத்திய அரசு மாநில அரசுக்கு செய்தால் ரத்தமும், மாநில அரசு ஊராட்சிக்கு செய்தால் சட்னியுமாக வருமாம்.திராவிட அரசுகள் பஞ்சாயத்துராஜ் சட்டத்தை சவப்பெட்டிக்குள் அடைத்ததைப் பற்றி விரிவாக வரும் அரசியல் கண்ணாடி இதழில் பார்ப்போம்.

Also Read  தமிழக அமைச்சர்களின் தொடர்பு எண்கள்