வருமானம் இல்லா ஊராட்சிகளுக்கு நிதி- என்னதான் தீர்வு?

12525 ஊராட்சிகளில் இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் ஊராட்சிகளுக்கு மட்டுமே தன்னிறைவான வருமானம் வருகிறது.

9000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மாநில,மத்திய அரசுகளின் நிதியை எதிர்பார்த்து உள்ளன.

இந்த ஊராட்சிகளின் நிதி தேவைக்கு என்னதான் வழி?

ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது,

மாதமாதம் ஒவ்வொரு ஊராட்சிகளின் இருப்பு மற்றும் தேவைகளை பற்றிய விவரங்கள் ஒன்றிய அலுவலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

ஆக, ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் எவ்வளவு தேவை என்ற அனைத்து விவரங்களும் அரசுக்கு தெரியும். ஆனால், அதை எப்படி சரி செய்யவேண்டும் என்ற முயற்சியை மட்டும் யாரும் எடுக்கவில்லை.

இந்தியாவுக்குள் இருக்கும் இலங்கையாகவே தமிழக ஊராட்சிகளின் பொருளாதார நிலை உள்ளது.

மத்திய அரசின் நிதியில் வரும் திட்டத்தை செயல்படுத்தினால் யாருக்கு எவ்வளவு பங்கு என்ற பஞ்சாயத்தை சரிசெய்யவே அதிகாரிகளுக்கு போதுமென்று ஆகிவிடுகிறது.

பஞ்சாயத்து நிர்வாகத்தை நம்பி பொருட்களை வழங்கியவர்களுக்கும், வேலை செய்தவர்களுக்கு பதில் சொல்வதில் எங்களின் பாதி பணிநேரம் முடிந்து விடுகிறது.

இனி,ஆறுமுறை கிராமசபை என்ற அறிவிப்பு எங்களை பாடாய் படுத்துகிறது.

ஒவ்வொரு ஊரட்சிகளிலும் அனைத்துத்துறை அதிகாரிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் என கிளம்பி வந்துவிடுகின்றனர்.வாரம் அல்லது மாதம்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்.

Also Read  தும்மனபள்ளி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்

இப்படி நடைபெறும் நிகழ்வுகளுக்கு செலவு செய்வதற்கு எங்கு பணம் உள்ளது.

ஏசி அறையில் இருந்து பணிபுரியும் அதிகாரிகளுக்கு கள யதார்த்தம் புரிவதே இல்லை என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

நிதி பிரச்சனையை சரி செய்யாவிட்டால், இலங்கையில் அதிபர் மாளிகை முற்றுகை இடப்பட்டதைப் போல, ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகமும் பொதுமக்களால் முற்றைகையிடப் படும் நிலை வரலாம் என்றார் ஒரு ஊராட்சி தலைவர்.

அடிப்படை தேவைகளுக்கான நிதி எந்த வழியில் வழங்கலாம் என அதிகாரிகள் விரைவில் முடிவெடுக்க வேண்டியது மிக அவசியம்.