முதல் கணக்கில் நிதி – இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

ஒவ்வொரு ஊராட்சியிலும் பல்வேறு கணக்குகள் நிர்வகிக்கப்படுகின்றன.ஆனால், முதல் கணக்கின் நிதி தான் ஊராட்சியின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.

வீட்டு வரி, தொழில் வரி,குடிநீர் வரி,வீட்டுமனை அனுமதி என உள்ளூர் வருவாய் வரும் ஊராட்சிகள் வெறும் பத்து சதவீதம் மட்டுமே.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகள் மட்டுமே தன்னிறைவு வருமானம் உள்ள ஊராட்சிகள் ஆகும்.

அதுபோல, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 400 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 50 ஊராட்சிகள் மட்டுமே சுய வருவாய் உள்ள ஊராட்சிகள் . மற்ற ஊராட்சிகளில் அன்றாட செலவுகளுக்கு கூட நிதி இல்லாத நிலையே உள்ளது. மற்ற கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை முதல் கணக்கிற்கு மாற்றுவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து,இராமதாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவது அரசின் தலையாயக் கடமை ஆகும்.

Also Read  மாவிலங்கை ஊராட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி