அக்டோபர் 3 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்

ஊராட்சி செயலர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்:.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் தலைவர் அ. ஜான்போஸ்கோ பிரகாஷ் வலியுறுத்தல்

தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், வாழப்பாடியில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அ.ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்ததாவது:

ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிகின்ற கிராம ஊராட்சி செயலாளர்கள், பல்வேறு திட்டப் பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்த அழுத்தம் தருவதால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சீரான பணியை வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு, ஊராட்சி மன்றதலைவர்கள் மூலம் ஊதியம் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும்.

இந்த முக்கிய 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் 3 நாள் ஊதியமில்லா விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசும், முதல்வர் மு.க. ஸ்டாலினும், எங்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும்.

Also Read  மாபெரும் கருத்துக் கணிப்பு - வெற்றி யாருக்கு?

கோரிக்கை நிறைவேறாத நிலையில், அடுத்தகட்டமாக, அக்டோபர் 3 முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மாநில பொருளாளர் கே.மகேஸ்வரன், நாமக்கல் மாவட்ட தலைவர் ஆர்.செந்தில்குமார்,
மாநில துணை செயலாளர் டி.மணிவேல், வாழப்பாடி ஒன்றிய தலைவர் பி.அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் வி.குமரேசன்,
நாமகிரிபேட்டை ஒன்றிய பொருளாளர் ஆர்.கருணாகரன், ஆகியோர் உடனிருந்தனர்.